‘ஓவர்’ செக்ஸும், காபியும் பக்கவாதத்திற்கு இட்டுச் செல்லும்

Beep Stories

பக்கவாத நோய் மனிதர்களை முடமாக்கும் அபாயகரமான நோயாகும். மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களின் சுவர்கள் வலுவிழக்கும் போது ரத்தம் கசிந்து பக்கவாதம் ஏற்படுகிறது.

காபி, உடற்பயிற்சி போன்றவை அதிகமானால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது என நெதர்லாந்தை சேர்ந்த நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து நெதர்லாந்தின் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணர் மானிக் எச்.எம்.விலாக் என்பவர் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகமாக காபி குடிப்பதால் மூளையில் ரத்த அழுத்தம் அதிகமாவதாக கண்டறிந்தனர்.

அதிகரிக்கும் ரத்த அழுத்தம்

மூளையில் ரத்த அழுத்தம் அதிகமாவதற்கு 8 முக்கிய காரணங்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதில் முதல் இடத்தில் இருப்பது நாம் குடிக்கும் காபி தான். இது பக்கவாதம் ஏற்பட 10.6 சதவீதம் காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்தாக தீவிர உடற்பயிற்சி செய்வதால் 7.9 சதவீதமும், அதிக உடலுறவினால் 4.3 சதவீதமும் பக்கவாதம் ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

குளிர்பானம் குடித்தல்

சிரமப்பட்டு உடல் உபாதைகளை வெளியேற்றுவதால் 3.6 சதவீதமும், கோலா பானம் குடித்தல் 3.5 சதவீதமும், அதிர்ச்சி அடைவதால் 2.7 சதவீதமும், கோபப்படுவதால் 1.3 சதவீதமும் ரத்த குழாயில் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படுகிறது என ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.