தாம்பத்ய உறவு என்பது களைப்பு ஏற்படுத்தாத ஒரு போர். அந்த போர்க்களத்தில் வெற்றிக்காக தோற்பதும், தோல்விகளை சந்தோசமாக அங்கீகரிப்பதும் அன்றாக வாடிக்கை. காதல் போர்க்களத்தில் தம்பதியர் உற்சாக விளையாட்டு முடிந்தவுடன் என்ன செய்கின்றனர் என்று சுவையான ஒரு ஆய்வு ஒன்று சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அதில் பெண்கள் முத்தமிட விரும்புவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் ஆண்கள் பலரும் ரிலாக்ஸ்சாக புகைப் பிடிப்பதை விரும்புவதாக கூறியுள்ளனர். ஜர்னல் ஆக் செக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள சுவையான அந்த ஆய்வு முடிவு உங்களுக்காக.
அரவணைப்பு அவசியம்
உறவின் தொடக்கத்தில் துணையை உற்சாகப்படுத்த ஆண்கள் முத்தமிடுகின்றனர். ஏனெனில் உறவின் திறவுகோல் முத்தம்தானே. அப்போது வெட்கப்பட்டு விலக்கும் பெண்கள் கூட உறவு முடிந்ததும் முத்த மழையால் குளிப்பாட்டி விடுகின்றனராம். உறவு முடிந்த களைப்பில் கட்டி துணையை கட்டிக்கொண்டு உறங்குவது, கையால் வருடுவது என ஆசையை வெளிப்படுத்துகின்றனராம் பெண்கள்.
தம் போட விருப்பம்
அதேசமயம் ஆண்கள் பலரும், அதான் எல்லாம் முடிந்தாகிவிட்டதே ரிலாக்ஸ்சாக ஒரு தம் போடலாம் என்று வெளியில் கிளம்பிவிடுகின்றனராம். இன்னும் சிலர் தண்ணீர் குடிப்பது, சாப்பிடுவது அல்லது கம்மென்று போர்த்தி படுத்து உறங்குவது போன்றவைகளை செய்கின்றனராம் இவ்வாறு தெரிவிக்கிறது அந்த ஆய்வு முடிவு.